என் சொந்த ஊர் உத்திரமேரூர் காஞ்சி நகர் அருகில் என்றாலும் வெகு சில முறைதான் சுற்றித்திரிந்தது உண்டு. இம்முறை என் பயணம் என் புல்லெட் வண்டியில்.
இம்முறை சென்று சேர்த்தது கைலாசநாதர் கோவிலுக்கு. மிகவும் நேர்த்தியான பெருந்தளி இது. கண்ட இடம் எல்லாம் சிறப்பு . காண கண் கோடி வேண்டும் நமக்கு. என் விரிஉரையை விட கைலாசநாதர் சிறந்தது.
ஆம் நான் ஒரு கல்யாணத்தின் பொருட்டு அங்கு செல்ல வேண்டிய வேலை இருந்தது , எனவே என் இதை மற்றும் ஒரு முக்கிய நிகழ்வாக மாற்றும் எண்ணம் தோன்றிற்று.
அதன் பயன் என் நண்பர் கோகுலேனுடன் செல்வதாய் முடிவாயிற்று. காலை 6 மணி முதல் தாம்பரம் வரை அசோக் நகரில் இருந்து தனியாக பயணித்தேன். பின்பு 7 மணிக்கு நண்பரை சந்தித்து காஞ்சி நோக்கி பயனிக்கலாணோம். ஒரு மணி பயணத்தின் பின்பு காலை 8 மணிக்கு காஞ்சியில் பிரவேசித்தோம்.
சிறிது தேனீர் மற்றும் காலை சிற்றுண்டி முடித்து , அன்றைய திட்டம் குறித்து முடிவு செய்தோம்.
பின்பு நேராக சென்றது காமாட்சி அம்மன் கோவிலுக்கு , அங்கு எப்போதும் ஒரு இனிமை இருப்பதுண்டு. கடவுள் நம்பிக்கை எல்லாம் மீறிய ஒரு ஈர்ப்பு காஞ்சிக்கே எப்போதும் உண்டு. அதிலும் இங்கே ஒரு வியப்பு. கடவுள் தரிசனம் கண்ட பின்பு சென்றது கோவிலை சுற்றி. அங்கே 10 ரூபாய்க்கு தாழம்பூ குங்குமம் கிடைக்கும். மிகுந்த மனமும் ஈர்ப்பும் உடையது. அதை வாங்கிக்கொண்டு பயணமானோம் சங்கர மடத்திற்கு.
| kaamatchi kovil kulam |
| kovil yanaigal |
மடத்தில் முன்பு போல் இல்லை. எங்கும் கட்டிடங்கள் , மரங்கள் யாவும் மறைந்துவிட்டன. என் தந்தையுடன் நான் கண்ட இடமாக இப்போதில்லை அது. நகரம் வளர நன்மை உண்டு , ஆனால் அது பல நல்லவைகளையும் நசுகிவிடுகிறது. போகட்டும் நல்ல சூழல் சந்திரசேகர பிருந்தாவனத்தில். பார்த்த பின்பு எதிரில் உள்ள "கங்கை கொண்டான் மண்டபம்" கண்டோம் . இதற்கு ஒரு வரலாறு உள்ளது. ராஜேந்திர சோழன் கங்கை வென்று திரும்பும் போது இப்படி ஒரு மண்டபம் அங்கங்கே கட்டினான் என்றும் , அது அவர்கள் சேனை இளைபார்வதர்கேன்று கேள்விபட்டுள்ளேன்.
இவை அனைத்திற்கும் பின்பு ஒரு திருமணம் ஒன்றை சென்று பார்த்தேன் , என் தந்தையின் சார்பாக. அரை மணி நேர உரையாடல்களுக்கு பின் மீண்டும் பயணப்பட்டோம்.
இம்முறை சென்று சேர்த்தது கைலாசநாதர் கோவிலுக்கு. மிகவும் நேர்த்தியான பெருந்தளி இது. கண்ட இடம் எல்லாம் சிறப்பு . காண கண் கோடி வேண்டும் நமக்கு. என் விரிஉரையை விட கைலாசநாதர் சிறந்தது.
படங்களை இங்கே பாருங்கள்:
இவை அனைத்தின் பின்பு சென்றது ஏகம்பரநாதர் கோவிலுக்கு. சிவகாமியின் சபதம் சொல்லும் கோவில். நாங்கள் சென்ற போது 13ஆம் நாள் பங்குனி திருவிழா. பறை கொற்ற வந்தார் ஏகாம்பரேஸ்வரர். பார்த்தோம் களித்தோம். பின்பு கோவிலுக்குள். மாவடி, விஷ்ணு சந்நிதி , 1008 சகஸ்ர லிங்கம் , பஞ்சமுக விநாயகர் என பற்பல.
அனைத்தின் பின்பு சென்றோம் வெயிலின் தாகத்தினால் சிறிது இளைபாற. அங்கே கண்டோம் ஒரு குதிரை வண்டியை. வெகுநாட்களுக்கு பின்பு இன்று தன கண்டோம் அப்படி ஒரு வண்டியை. எங்கே உள்ளது சென்னையில் இப்போது இப்படி ஒரு வண்டி. அந்த வண்டியை படம் பிடித்ததற்கு அதன் உரிமையாளர் என்னிடம் பணம் கேட்டார் , ஒன்றும் சொல்லவில்லை அவர் நிலை அவ்வாறு.
அதன் பின் வைகுண்டவரதர் கோவில் சென்றோம். இது 108 திவ்ய தேசத்தில் ஒன்று. மிகுந்த நேர்த்தியான கற்றளி. பல சிற்பங்கள் சிதிலடைந்து உள்ளது . அதன் படங்களும் இவ்விடம் உள்ளது.
பின்பு சென்றது வரதராஜ பெருமாள் கோவிலுக்கு. 108 திவ்ய தேசத்தில் இதுவும் ஒன்று. அழகான கோவில். கோவில் நாங்கள் செல்லும் நேரத்தில் மூடப்பட்டு இருந்தது. கோவில் வெளியே 100 கால் மண்டபம் மற்றும் கல்லால் அனா சங்கிலி குளம் என பலவும் சுற்றி பார்த்தோம். அதன் பின்பு அங்கேயே சாப்பிட்டு முடித்து சென்னை நோக்கி பயணமானோம்.
சென்னை தாம்பரத்திற்கு 2 மணி அளவில் வந்து சேர்த்தோம். சாலை வசதி நன்றாக உள்ளது.
| நண்பர் கோகோலேன் |
| நான் |
மற்றும் ஒரு பயணத்தில் சந்திப்போம் நன்றி.


